இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா..? தனுஷின் வளர்ச்சியில் இந்த நடிகைக்கு பங்கு உண்டு!
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, அதன் பின் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கே அமிதாப்புடன் அவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.
கடைசியாக அவர் நடித்த தப்பாட் திரைப்படம் மிகப் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. இந்த பபிடத்தின் மூலம் பாலிவுட் சினிமாவின் ஹிட் ஹீரோயினாக பேசப்பட்டு வருகிறார். அத்துடன் சிங்கிள் ஹீரோயினாக கதையை நகர்த்தி செல்லும் படங்கள் டாப்ஸியை தேடி வருகிறது.
இந்நிலையில் டாப்ஸியின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. பாப்பாவாக இருந்தபோதும் வெள்ளாவி வைத்து வெளுத்தது போல் இருக்கும் டாப்ஸி குட்டியை அனைவரும் ரசித்து கொஞ்சி வருகின்றனர். ஆடுகளம் படத்தில் இவர் நடித்ததாலோ என்னவோ தனுஷுக்கு லக் அடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.