பிரபல நடிகரின் புதிய மருத்துவ முறை….
நடிகர் விஷ்ணு விஷால் சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபியை செய்து கொண்டார். இது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நீர்ப்பறவை, குள்ள நரிக் கூட்டம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ராட்சசன் படம் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களின் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் விஷ்ணு விஷால். இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் சில வீடியோக்களைப் பதிவிட்டு தனது ரசிகர்களுடன் உரையாடுவார்.
இந்நிலையில், இவர் சீன மருத்துவமனை முறையான கப்பிங் தெரபியை செய்துகொண்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் சீனாவின் பழங்கான மருத்துவ முறையாகும். இதுகுறித்த புகைப்படத்தை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.