விஷ்ணு விஷாலுக்கு இவ்ளோவ் அழகான அக்கா இருக்காங்களா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.
பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார். அண்மையில் தான் இருவருக்கும் இரண்டாம் திருமணம் நடைபெற்றது. விஷ்ணு விஷால் பற்றி இவளவு விஷயம் தெரிந்த நமக்கு அவருக்கு ஒரு அக்கா இருப்பது தெரியாமல் போயிடுச்சு. ஆம், இவருக்கு ருத்ரா என்ற தம்பியும் அஞ்சல் என்ற அக்காவும் இருக்கிறார்கள். அக்காவுடன் இருக்கும் விஷ்ணு விஷாலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.