திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (17:35 IST)

ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த யுவன்சங்கர் ராஜா...வைரல் வீடியோ

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தற்போது, கோப்ரா, இரவில் நிழல், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதேபோல் உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகள் நடத்திவருகிறார். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

துபாயில் சமீபத்தில் நடந்த துபாய் எக்ஸ்போ -2020 என்ற நிகழ்ச்சியில் இளையராஜா, அனிருத், யுவன் சங்கர் ராஜா ஆகிய முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரி நடந்தது.

இதுபற்றி யுவன்சங்கர் ராஜா, ரஹ்மானை புகழ்ந்து பேசியுள்ளதாவது: இந்த நிகழ்ச்சியை நடத்த ஏ.ஆர்.ரஹ்மானை நடத்தும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர், நான் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தினால் என் ஊரிலுள்ளவர்களும் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறி, அப்பா, அனிருத் மற்றும் எனது பெயரைக் குறிப்பிட்டுள்ளார், அதனால் தான் நாங்கள் அங்கு இசையமைக்கக் காரணம் ! இதுபோல் யாரும் சொல்ல மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.