வியாழன், 15 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (12:24 IST)

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆர்மியெல்லாம் எழுந்திரிங்க! – ஹவுஸ் ஆப் ட்ராகன் டீசர்!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆர்மியெல்லாம் எழுந்திரிங்க! – ஹவுஸ் ஆப் ட்ராகன் டீசர்!
ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு உலக புகழ்பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் சிரிஸின் முன்கதையான ஹவுஸ் ஆஃப் ட்ராகன் சிரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் 2011ம் ஆண்டில் வெளியான வெப் சிரிஸ் கேம் ஆஃப் த்ரோன்ஸ். சாங் ஆப் ஐஸ் அண்ட் ஃபயர் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த வெப் சிரிஸ் பரவலான வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்குள் 8 சீசன்கள் வெளியாகியுள்ளது. இதன் கடைசி சீசன் கடந்த ஆண்டு வெளியானது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரின் ஸ்பின் ஆஃபாக ஹவுஸ் ஆஃப் ட்ராகன் என்ற புதிய தொடர் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொடர் தயாராகியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஹவுஸ் ஆப் ட்ராகன் டீசரும் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.