செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:52 IST)

தமிழில் வெளியானது சர்ச்சைக்குரிய ஃபேமிலி மேன் வெப் சிரிஸ்!

சில நாட்கள் முன்னதாக அமேசான் ப்ரைமில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய இணையத்தொடர் ஃபேமிலிமேன் தமிழில் வெளியாகியுள்ளது.

சமந்தா நடித்த ஃபேமிலிமேன் என்ற இணைய தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்கள் முன்னதாக அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த தொடரில் ஈழத்தமிழர்களையும், தமிழகத்தையும் தவறாக சித்தரித்துள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதையும் மீறி ஃபேமிலிமேன் தொடர் வெளியானது.

மிகவும் சர்ச்சைக்குள்ளான இந்த தொடர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.