1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (14:11 IST)

சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா - காத்துவாக்குல ரெண்டு காதல் டீமுடன் ஹேப்பி மூமன்ட்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து 2வது முறையாக நடிக்கும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்தப் படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்நிலையில் பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி , விக்னேஷ் சிவன் , நயன்தாரா ஆகிய மூவரும் சமந்தாவுக்கு கேக் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். 
 
அதாவது 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அண்மையில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு கிடைத்தன. இதேபோல் சிறந்த நடிகைக்கான விருது ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சமந்தாவுக்கு கிடைத்தது. இதற்காக கேக் வெட்டி சமந்தாவை சர்ப்ரைஸ் செய்துள்ளனர் படக்குழு.