வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (18:26 IST)

நடிகரின் மகள் பெயரில் போலிக் கணக்கு… புகாரை அடுத்து நீக்கம்!

நடிகர் பிருத்விராஜின் மகள் பெயரில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிருத்விராஜன். இந்நிலையில் இவரின் 6 வயது மகள் அலாக்ரிதாவின் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கப்பட்டதை அடுத்து பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா மேனன் ஆகியோர் அதிர்ச்சியாகினர்.

மேலும் அந்த கணக்கை நீக்கவேண்டும் என அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த கணக்கு நீக்கப்பட்டுள்ளது.