திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (16:40 IST)

வெள்ளை உடையில் ஏஞ்சலாக மாறிய சமந்தா – ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் புகைப்படம்!

நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கொரோனா நடிகைகள் எல்லோரும் தங்களை ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகின்றனர். படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் ஒருவர்.


வரிசையாக தன் உடற்பயிற்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த சமந்தா இப்போது வெள்ளை உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அழகிய ஏஞ்சல் போல உள்ளீர்கள் என்று ரசிகர்கள் ஜொள்ளு விட ஆரம்பித்துள்ளனர்.