செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 30 ஜூலை 2023 (19:49 IST)

மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய ‘மாமன்னன்’: பகத் பாசில் கொண்டாடும் ஜாதி அபிமானிகள்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.
 
இந்த படத்தில் தலித்துகளை நல்லவர்களாகவும் தலித்துக்கு எதிரான ஒரு ஜாதியை வில்லனாகவும் மாரி செல்வராஜ் காட்டிருப்பார். அதே சமயத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த பகத் பாசிலுக்கு சில மாஸ் காட்சிகள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தலித்துகள் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பகத் பாசிலின் மாஸ் காட்சிகளை எடிட் செய்து ஜாதி பெருமை பேசும் பாடல்களை இணைத்து இணையதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் 
 
தங்களது ஜாதியை சேர்ந்த இவர் பெருமைக்குரியவர் என்ற வகையில் பாடல்களை இணைத்து  சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். பகத் பாஸில் கேரக்டருக்கு எந்த ஜாதி தலைவரின் பாடலை போட்டாலும் பொருத்தமாக இருக்கிறது என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. 
 
தலித் பிரிவினரை உயர்வாக காட்ட வேண்டும் என்று எடுத்த திரைப்படத்தில் தலித்துக்கு எதிரான சமூகத்தினரை உயர்வாக காட்டி நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மாரி செல்வராஜூக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva