1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified வெள்ளி, 26 மே 2023 (18:36 IST)

வில்லியாக நடிக்கும் விஜய் பட நடிகை

Shooting
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சோனியா அகர்வால். இவர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பின்னர், 7ஜி ரெயின்போ காலனி, விஜய்யுடன் மதுர, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு,  மீண்டும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
soniya agarwal

இந்த நிலையில்,  இயக்குனர் ஏ.ஆர்.  ஜெயகிருஷ்ணா இயக்கத்தில்  உருவாகி வரும் உன்னால் என்னால் என்ற படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.

சோனியா அகர்வால் வில்லியாக நடிக்கும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்பு அதிகரித்துள்ளது.