விஜய்யின் தந்தை கட்சி மாநில நிர்வாகி கைது !
சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ,சந்திரசேகர் விஜய்க்கு தெரியாமல் அவரது பெயரில் கட்சி தொடங்கினார். ஆனால் விஜய் இதற்கு தனக்கும் சம்பந்தம் இல்லையென்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர் தனது கட்சியை பதிவு செய்யும் முடிவை கைவிட்டார்.
இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தகராறு புகாரில் அகில இந்திய தமிழக விஜய் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ராஜா இன்று கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்த ராஜாவை திருச்சி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.