செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2017 (12:22 IST)

பிக்பாஸ் வீட்டில் கொலை செய்யப்பட்டு ஆவியான கணேஷ் மற்றும் ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக செல்கிறது. நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின்படி கொலையாளி கண்டுபிடிக்கும்  பொறுப்பு போலீஸ் அதிகாரிகள் வையாபுரி மற்றும் காஜல். இவர்கள்தான் போலீஸ் என்று மற்றவர்களுக்கு தெரியபடுத்தினார் பிக்பாஸ். ஆனால், ஆரவ் மற்றும் ஹரிஷ் தான் கொலையாளி என்பது யாருக்கும் தெரியாது.

 
இவர்கள் கணேஷிற்கு முட்டையை ஊட்டிவிட்டு அவரை கொலை செய்தனர். அதன் பிறகு அவரை கணேஷ் நீங்கள்  இறந்துவிட்டதாகவும் இனிமேல் வீட்டிற்குள் வரக்கூடாது என்றும் பிக்பாஸ் தெரிவித்தார். அடுத்தாக ரைசா வை "அட  போங்கய்யா" என்று மூன்றுமுறை அவர் வாயிலே கூறசெய்து கொலை செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் உத்தரவுவிட்டார். அதையும் வெற்றிகரமாக முடித்து கணேஷுக்கு கொடுக்க பட்ட தண்டனை ரைசவுக்கும் கொடுக்கப்பட்டது.
 
அவர்களுக்கென தனியாக உடை தரப்பட்டு, அவர்கள் பிக்பாஸ் வீட்டின் வெளியே மரத்தடியில்தான் தூங்க வேண்டும். ஆவி  ஆனால், டாஸ்க் செய்யும் போது உள்ளே வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.