புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2017 (18:01 IST)

குற்றங்களை செய்வோரும், மறைப்போரும் நம் கண்களில் படாமல் போய்விடுவார்களா? - கமல் ப்ரொமோ

பிக்பாஸில் இந்த வாரம் விறுவிறுப்பை கூட்ட சில சுவாரசியமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. மல்யுத்த போட்டி  நடத்தப்பட்டு. இதற்கு ஒரு பயிற்சியாளரும், இரண்டு மல்யுத்த போட்டியாளர்களும் உள்ளே வந்தனர். 

 
அந்த போட்டியாளர்களுடன் அதிக நேரம் யார் போராடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். இதில், கணேஷ் மற்றும்  சுஜா இருவரும் வெற்றிபெற்றதனால் பரிசாக முட்டையை வாங்கினார்கள்.
 
இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் கொலையாளிகள் அடுத்த ஒரு கொலையை செய்து முடித்தனர். இதில், கணேஷ் மற்றும் ரைசா தற்போது ஆவியானதாக பிக்பாஸ் தெரிவித்தார். இந்த நிலையில், இவர்களின் அடுத்த டார்க்கெட் யார் என்பது இன்னும்  தெரியவில்லை. 
 
இதற்கிடையில் வையாபுரியும், காஜலும் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதுள்ள பிக்பாஸ் ப்ரொமோவில் குற்றங்களை செய்வோரும், குற்றங்களை மறைப்போரும் கைகோர்த்து கொண்டால் நம் கண்களில்  படாமல் போய் படாமல் போய்விடுவார்களா? என்று கூறுகிறார்.
 
இதிலிருந்து கமல் குறிப்பிட்டது ஆரவ் மற்றும் ஹரிஷ் கல்யாண் கைகோர்த்து செய்யும் கொலைகளை பற்றிதான் பேசியுள்ளார் என தெரிகிறது. மூன்றாவது கொலை செய்யப்படுபவர் யார்? என்ன நடக்கப் போகிறது. இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.