வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (22:33 IST)

'எல்.கே.ஜி வெற்றிக்கு பின் ஹீரோயினியை ஓரங்கட்டிய ஆர்.ஜே.பாலாஜி!

ஆர்ஜே பாலாஜியை இதுவரை அனைவருக்கும் ஒரு காமெடி நடிகராக மட்டுமே தெரியும். சென்னை வெள்ளம் மற்றும் ஜல்லிக்கட்டின்போது அவரை ஒரு சமூக சேவகராகவும் பலர் பார்த்தனர். ஆனால் தற்போது அவர் கோலிவுட் திரையுலகின் ஒரு முக்கிய நபராக மாறிவிட்டார்.
 
ரூ.100 கோடி, ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக படமெடுத்து தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தியவர்கள் மத்தியில் ஒருசில கோடி பட்ஜெட்டில் கச்சிதமாக ஒரு படத்தை எடுத்து நான்காவது நாளே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் வகையில் 'எல்.கே.ஜி' படத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்த வெற்றியால் அவரது ரேஞ்சே மாறியுள்ளது
 
உதாரணமாக எல்.கே.ஜி ரிலீசுக்கு முன் 'பூமராங் படத்தின் போஸ்டரில் அதர்வாவும், மேகா ஆகாஷும் இருந்தனர். ஆனால் எல்.கே.ஜி வெற்றிக்கு பின் போஸ்டரில் இருந்து மேகா ஆகாஷ் ஓரங்கட்டப்பட்டு அதர்வாவும் ஆர்ஜே பாலாஜியும் உள்ளனர். அதேபோல் ஜீவாவின் 'கீ' படத்திலும் ஆர்ஜே பாலாஜிதான் மெயின் நபராக விளம்பரப்படுத்தப்படுகிறார். ஒரே ஒரு படத்தின் வெற்றியால் ஆர்ஜே பாலாஜி கோலிவுட் திரையுலகில் பல படிகளை தாண்டிவிட்டார் என்றே கூற வேண்டும்