திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:09 IST)

''சாதித்தது என்ன? ''இந்திய அணியை கடுமையாக விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!

இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் இந்திய அணி பலமிக்க அணியாக வலம் வருகிறது. முன்னாள் கேப்டன் தோனியில் தலைமையில் இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் கோப்பைகள் வென்றுள்ளது.

அதேபோல் கோலி தலைமையிலான இந்திய அணி அதிக வெற்றிகள் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், டி-20 உலகக் கோப்பையில் நேற்றைய அரையிறுதிப் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோற்ற நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி அவர்களின் சொந்த மண்ணில் கோப்பை வென்றதது தவிர அவர்களின் வேறொன்றும் சாதிக்கவில்லை.

கிரிக்கெட்டில் இந்திய அணி வெள்ளைப் பந்து அணி என கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
Edited by Sinoj