விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம்??
இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவரும் இவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து, கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை வினோத்ராஜ் இயக்குகிறர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்டுள்ளது. எனவே அங்கு சென்றுள்ள நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி –சேலையில் அணிந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அதன்பிறகு இருவரும் எந்தப் புகைப்படத்தையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், நயன்தாரா சமீபத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மோதிரம் அணிந்திருப்பது போன்று இருப்பதால் அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிறது.
இத்தனை வருடங்களாக லிவிங் டுகெதராக வாழ்ந்துவரும் விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாரா எப்போதும் திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.