ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (13:26 IST)

விக்னேஷ் சிவன் நயன்தாரா நிச்சயதார்த்தமா? புகைப்படத்தால் எழுந்த சந்தேகம்!

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ் சினிமாவின் லவ் பேர்ட்ஸாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் விரைவில் திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். ஆனால் நயன்தாரா வரிசையாகப் படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில் இப்போதைக்கு திருமணம் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா வெளியிட்ட புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் நெஞ்சில் கைவைத்து கொடுத்துள்ள போஸில் கையில் மோதிரம் அணிந்திருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் அந்த நிச்சயதார்த்த மோதிரம்தான் இது என்றும் கூறி வருகின்றனர்.