விக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி!

Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (08:36 IST)

பிரபல பாடகியான ஜோனிடா காந்தி விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

இயக்குனராக அறியப்பட்ட நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இப்போது தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் உருமாறியுள்ளார். தனது ரௌடி பிக்சர்ஸ் மூலமாக ராக்கி, கூழாங்கல் மற்றும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களை வாங்கியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை தயாரித்து வரும் அவர் இப்போது வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் எனும் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினாயக் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் நடித்த கே கே நடிக்கிறார். கதாநாயகியாக பிரபல பாடகியான ஜோனிடா காந்தி நடிக்க உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டாக்டர் படத்தின் செல்லம்மா படத்தின் பாடல் வீடியோவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :