1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (16:35 IST)

ஒரு வழியா வெளியாகும் ”எனை நோக்கி பாயும் தோட்டா”: க்ளாசிக் டிரைலர் இதோ...

இப்போ வெளியாகும் அப்போ வெளியாகும் என இழுத்து அடிக்கப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டாவின் ரிலீஸ் தேதியும் டிரைலரும் வெளியாகியுள்ளது. 
 
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
 
இந்நிலையில் இந்த படத்திற்கு உண்டான பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது ரசிகர்களால் நம்பட்டது. 
ஆனால் ஒவ்வொரு முறையும் எதோ ஒரு காரணத்தால் படம் தள்ளிப்போனது. ஒரு கட்டத்தில் படம் டிராப் எனவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதோடு படம் செப். 6 ஆம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
#ENPT, #ErangiAdikkalaamnuMudivuPanniyaachu போன்ற ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகிறது. இதோ இந்த படத்தின் டிரைலர்...