வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:30 IST)

ஒருவழியாக முடிஞ்சதுபா... என்னை நோக்கி பாயும் தோட்டா குறித்து முக்கிய தகவல்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும், நிதி நெருக்கடியால் படம் வெளியாகாமல் உள்ளது.


 
இந்நிலையில் இப்போது வந்துள்ள தகவல் படி, 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  கடந்த டிசம்பர் 2வது வாரத்தில் படக்குழு கூறியபடி, படத்தை சென்சாருக்கு செல்வதற்கு தயார் செய்துவிட்டார்கள். தயாரிப்பாளர மதன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். "இன்னும் ஓரிரு தினங்களில் சென்சார் தொடர்பான தகவல் உங்களுக்கு வரும். நீண்ட நாள் காத்திருப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. நீண்ட நாள்கள் பொறுமையாக இருந்தவர்களுக்கு நன்றி" என கூறியுள்ளார்.