1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (19:18 IST)

நெஞ்சம் மறப்பதில்லை…படத்தின் En Pondatti Ooruku Poita சிங்கில் ரிலீஸ்…

செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்தின்  En Pondatti Ooruku Poita என்ற  சிங்கில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. ரெஜினா கசாண்ட்ரா, நதிதா ஸ்வேதா ஆகியோர் நடித்து உருவான இந்த படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட நாள் காத்திருப்பில் இருந்த இந்த படம் எதிர்வரும் மார்ச் 5 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு 1.24 கோடி கடன் பாக்கி தர வேண்டியுள்ளதாகவும், அதை தரும் வரையில் படத்தை வெளியிட கூடாது என்றும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனால் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று மாலை உயர்நீதிமன்றம் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

எனவே இப்படம் நாளை உலகமெங்கிலும் ரிலீஸாகவுள்ளது. இதனால் எஸ்.ஜே,சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள En Pondatti Ooruku Poita என்ற முதல் சிங்கில்   யு1 யூடியுப் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்பாடலை யுவன்சங்கர் ராஜா மற்றும் எஸ்.ஜே,சூர்யா இருவரும் பாடியுள்ளனர்.