1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (07:29 IST)

லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பீட்டர்பால் மனைவி!

லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பீட்டர்பால் மனைவி!
நடிகை வனிதா திருமண சர்ச்சை குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை கூறி வந்தாலும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்தை காரசாரமாக ட்விட்டரில் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. மேலும் வனிதாவுடன் நேரடி ஒளிபரப்பில் அவர் ஒரு தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாதத்தில் கலந்து கொண்டார் என்பதும் அந்த விவாதத்தின் போது வனிதா அவரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் என்பதும் தெரிந்ததே இந்த வீடியோக்கள் பரபரப்பாக வைரலாகி வருகிறது
 
இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் மன்னிப்பு கேட்டுள்ளார். நாங்கள் சொல்லித்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் எங்களுக்காக பேச வந்தார் என்றும் ஆனால் எங்களால் அவருக்கு தற்போது அவமதித்து ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு நாங்கள் தான் காரணம் என்று எண்ணும் போது தனக்கு பெரும் சங்கடமாக இருப்பதாகவும் எனவே லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்
 
வனிதா அப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க கூடாது என்றும் அவர் மன்னிப்பு கேட்பாரா என்பது எனக்கு தெரியாது என்றும் இருப்பினும் என்னால் தான் இந்த அசிங்கம் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்டதால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததை அடுத்தே இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது