புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (13:42 IST)

நெருங்கி வரும் தேர்தலுக்கு விழிப்புணர்வு செய்த விஜய்! வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர் முருகதாஸ்!

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரம் செய்து வந்ததையடுத்து சினிமா பிரபலங்களுக்கும் ஜனநாயகத்தின் கடமையாக அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்கவேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.


 
இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் இந்த தேர்தலுக்கு பல்வேறு புதிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது. அதனால் மக்களும் தங்களுக்கான தலைவர்களை நேர்மையாக தேர்ந்தெடுக்கவேண்டும் என அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். 
 
அந்த வகையில் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சர்க்கார்’ படம் ஓட்டின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் எனவே அப்படத்தில் இடம்பெறும் ஓட்டளிப்பின் முக்கியத்துவத்தை பற்றிய வீடியோ காட்சி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முருகதாஸ். 
 
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில்  முருகதாஸின்  இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.