1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (12:01 IST)

ஆண்ட்ரியாவிடம் நேர்காணலின்போது ஆபாசமாக பேசிய தொகுப்பாளர்

பிரபல யூடியூப் சேனல் நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
பிரபல யூடியூப் சேனலில் நடிகை ஆண்ட்ரியாவின் நேர்காணல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் பேட்டி கண்டவர் ஆண்ட்ரியாவை வரவேற்கும் போது "நானும் எல்லோரையும் போலத்தான் உங்களை காதலுடனும் இச்சையுடன் பார்த்திருக்கிறேன். இன்று உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்கிறேன்" என கூறியுள்ளார். அது மட்டுமின்றி ஆண்ட்ரியா நடித்த  பச்சைகிளி முத்துச்சரம் போன்ற சில படங்களின் கேரக்டர் பற்றியும் அவர் பேசினார்.
 
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவது, நடிகையிடம் என்ன கேள்வி கேட்கவேண்டும் என தெரியாதா என பல்வேறு எதிர்ப்பு குரல்கள் ஒலித்தவண்ணம் உள்ளது.