செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (18:26 IST)

தொகுப்பாளராக முதல் நாளே அசிங்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஆதரவு கிடைத்தாலும், பிறகு போலி என்று பெயரெடுத்து தமிழக மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்தார் ஜூலி. வெளியில் வந்தாவது தனது கேரக்டரை மாற்றிக்கொண்டாரா என்றால்? இல்லை.

 
சமீபத்தில் ஜூலியிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பில் உள்ளார்களா என கேட்கப்பட்டது. அதற்கு ஹரீஷ் மற்றும்  ஓவியாவிடம் தினமும் போனில் பேசி வருவதாக கூறினார். ஆனால் இது குறித்து ஹரிஸிடம் கேட்டபோது அவர் பொய் சொன்னது தெரியவந்தது.
 
மேலும் ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது சின்னத்திரை தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது லட்சியம் என்று  கூறிய ஜூலிக்கு, கலைஞர் டிவி வாயிலாக நிறைவேறியதாக செய்திகள் வெளிவந்தன. அதில் ஓடி விளையாடு பாப்பா என்ற  நிகழ்ச்சியை கோகுலுடன் தொகுத்து வழங்குகிறார்.
 
இந்நிலையில் இதன் முதல் எபிசோட்டிற்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது குழந்தைகள் அக்கா எங்கள் வீட்டில் எல்லோரும் உங்களை திட்டி கொண்டே இருப்பார்கள். உங்கலைபோல் இருக்க கூடாது என்று கூறுவார்கள் என்றதும், குழந்தைகள் ஓவியா  ஓவியா என்று கத்தினர். இதனால் அவமானத்தால் ஜூலி மேடையிலேயே அழுது விட்டாராம்.
 
பின்னர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை மீண்டும் தொடர்ந்ததாகவும் தெரிகிறது.