வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:16 IST)

துல்கர் சல்மானின் சல்யூட் டீசர் ரிலீஸ் !

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் சல்யூட் மலையாள திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

 
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகிய குரூப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கேரள கேங்ஸ்டர் சுகுமார் குருப் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் சல்யூட் மலையாள திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியிருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கர் போலீஸாக நடித்துள்ளார். இதோ இந்த படத்தின் டீசர்....