திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (18:50 IST)

சூரரைப் போற்று: அப்துல்கலாம் கேரக்டருக்கு டப்பிங் கொடுத்தவரின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் வைரல்!

அப்துல்கலாம் கேரக்டருக்கு டப்பிங் கொடுத்தவரின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் வைரல்!
சூரரைப் போற்று திரைப்படத்தில் அப்துல் கலாம் கேரக்டருக்கு டப்பிங் கொடுத்த நவீன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது
 
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கேரக்டர் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வரும் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரியும் 
 
மதுரைக்காரரா நீங்க உள்ள வாங்க என்ற அப்துல்கலாம் குரல் கேட்டவுடன் சூர்யா அவரை பார்க்க செல்வார் என்பதும், தனது விமான நிறுவனத்தின் திட்டத்தை அவரிடம் கூறுவார் என்பதும்தான் தெரிந்ததே.
 
இந்த நிலையில் அப்துல் கலாம் கேரக்டருக்கு டப்பிங் கொடுத்த டப்பிங் கலைஞர் நவீன் தனது பேஸ்புக் பக்கத்தில் ’சூரரை போற்று’ படத்தில் அப்துல் கலாம் அய்யாவுக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பை கொடுத்த சூர்யாவுக்கு தனது நன்றி என்றும் இந்த படத்தில் தானும் பணியாற்றியது பெருமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் சூர்யாவுக்கு நடிக்க தெரியாது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள் என்றும் உண்மைதான் அவருக்கு நடிக்க தெரியாது அவர் கேரக்டராகவே வாழ்ந்து விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார் இந்த பதிவை சூர்யாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்