திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (22:29 IST)

’’சூரரைப் போற்று ’படம் ’அமேசான் பிரைமில் ரிலீசானது... படக்குழுவுக்கு வாழ்த்துகள் கூறிய கார்த்தி !

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப்படம் வரும் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாவதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று 11 ஆம் தேதியே படம் வெளியாகியுள்ளது. சூர்யா  ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா இன்று காலை முதலே சூரரைப் போற்று படத்தின் பெயரை ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு டுவிட்டரில் டிரெண்டிங் செய்தனர்.

இந்நிலையில் நாளைதான் இப்படம் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி என்றாலும் இன்று நள்ளிரவு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது சூரரைப் போற்று. சூர்யாவின் தம்பி கார்த்தி படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

ஏற்கனவே இயக்குநர்பாண்டிராஜ் சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், சூரரைப் போற்று புதிய அனுபவமாக இருந்தது. படத்திலுள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஆன்மாவைத் தொடுவதாக இருந்தது. சூர்யா சார் நடிப்பு அற்புதமாக இருந்தது.

சுதா மேம், உங்களது கடின உழைப்பை ஒவ்வொரு காட்சியிலும் பார்த்தேன்…. ஜிவி இசையும் அற்புதமாக உள்ளது. இப்படம் தீபவாளிக்கு காட்சி விருந்தாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.