வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 மே 2020 (17:37 IST)

தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் ரிலீஸான தமிழ்ப்படம்: எந்த நாட்டில் தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஒரு சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்டதை திரையரங்குகளும் ஒருசில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
 
அந்த வகையில் தற்போது துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதாகவும் அங்குள்ள திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல மொழித் திரைப்படங்கள் தற்போது திரையிடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் துபாயில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்தத் திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
துபாயை அடுத்து வேறு சில நாடுகளிலும் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்க திரையரங்கு உரிமையாளர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது