செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:53 IST)

சல்மான் கான் தற்போது நடித்து வரும் படம் அஜித் பட ரீமேக்கா?

சல்மான் கான் தற்போது நடித்து வரும் படத்துக்கு கிஸி கா பாய் கிஸி க ஜான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த படத்துக்கு முதலில்  ’கபி எய்ட் கபி தீவாளி’ என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது “கிஸி கா பாய் கிஸி கா ஜான்” எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெங்கடேஷ் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தி சினிமாவில் இந்த படத்தின் மூலமாக ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தைப் பற்றிய மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படம் 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. முன்னதாக வீரம் திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.