முதல் பார்ட் மாதிரி நாசமாக்கிடாதீங்கப்பா… திருஷ்யம் 2 உரிமையை வாங்கிய தயாரிப்பு நிறுவனம்!

Last Modified செவ்வாய், 4 மே 2021 (13:48 IST)

சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த மோகன்லாலின் திருஷ்யம் 2 படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையடுத்து இப்போது அந்த படத்தின் மற்ற மொழி ரீமேக் பணிகள் தொடங்கியுள்ளன. தெலுங்கில் ஏற்கனவே படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்தி ரீமேக் உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திருஷ்யம் 1 ரீமேக்கில் எல்லா மொழிகளிலும் ஹிட்டானாலும் இந்தியில் மட்டும் அட்டர் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :