வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (09:02 IST)

200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி கலக்கிய திரிஷ்யம் 2!

சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் திரிஷ்யம் இரண்டாம் பாகம்  8 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாம் பாகத்தையும் இந்தியில் ரீமேக் செய்தனர். இந்த ரீமேக்கில் அஜய் தேவ்கன் , தபு மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது.

இந்த ஆண்டு பல முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் திரிஷ்யம் 2 மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியாகி நான்காவது வாரத்தில் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த படம் திரையரங்கங்கள்  மூலமாகவே 211 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.