செவ்வாய், 21 மார்ச் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated: செவ்வாய், 29 நவம்பர் 2022 (18:11 IST)

கோடிக்கணக்கில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல்: தேவஸ்தான அதிகாரிகள் தகவல்!

Meenakshi Amman
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் தொகை ஒரு கோடிக்கும் அதிகமாக கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் அதில்  1 கோடியே 4 இலட்சத்து 37ஆயிரத்து 557 ரூபாய் ரொக்க பணம் ரொக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் 544 கிராம் தங்கம் 6 கிலோ 576 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 465 காணப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
நவம்பர் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva