1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:44 IST)

விஜய்யின் கோட் பட போஸ்டரை இமிடேட் செய்த டபுள் டக்கர் படக்குழு- இயக்குனர் வெங்கட்பிரபு ரியாக்‌ஷன்!

முதல்வர் மு க ஸ்டாலினின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரான இதயவியல் மருத்துவரான தீரஜ்  போதை ஏறி புத்தி மாறி எனும் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஒரு தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் இப்போது பேண்டசி படமான டபுள் டக்கர் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை மீரா மெகதி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று ரிலீஸாகிறது. இந்நிலையில் இப்போது இந்த படக்குழுவினர் கோட் படத்தின் போஸ்டரை இமிடேட் செய்தது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இது சமூகவலைதளங்களில் கவனம் பெற்று ட்ரோல்களை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.