திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (07:24 IST)

மறைந்த கலை இயக்குனர் மிலன் உடல் சென்னை வந்தது… இன்று அடக்கம்!

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் என்ற நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த முக்கிய பிரபலம் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அஜித் நடித்த வரும் ’விடாமுயற்சி’  படத்தின் கலை இயக்குனராக  மிலன் என்பவர் பணியாற்றி வந்தார்.

இது தவிர கங்குவா உள்ளிட்ட ஏராளமான பெரிய பட்ஜெட் படங்களில் அவர் பண்யாற்றினார். இந்நிலையில் அஸர்பைஜானில் இருந்து அவரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இன்று அவரின் உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.