1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (13:01 IST)

தங்கலான் திரைப்படத்தின் டீஸர் தயார்.. ரிலீஸ் எப்போது?இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி

தங்கலான் படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும் இந்த டீசர் விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் பா ரஞ்சித்  பேட்டி அளித்துள்ளார். 
 
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது. 
 
இந்த நிலையில் கிராபிக்ஸ்க்கு காட்சிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாகநடைபெற்று வரும் நிலையில் இன்று இயக்குனர் பா.ரஞ்சித்  செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது தங்கலான் திரைப்படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும் அடுத்த வாரம் டீசர் உடன் கூடிய அப்டேட் வரும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் தன்பாலின திருமணம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் மிக முற்போக்காக போய் கொண்டிருக்கும் சமயத்தில், உலகம் முழுவதும் தன்பாலின திருமணமானது ஏற்று கொள்ளப்பட்ட சட்டமாக இருக்கும் போது, இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பல உள்நோக்கங்கள் கொண்ட தீர்ப்பாகவே பார்க்கிறேன் என்றும்  இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டியில் கூறியிருந்தார்
 
 
 
Edited by Mahendran