செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (15:02 IST)

தேசிய விருதுகள் உட்பட எந்த விருதுகள் மீதும் நம்பிக்கையில்லை-விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால், தேசிய விருதுகள் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து, தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால், ஹரியுடன் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளார்.  இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கின்றார்.

தூத்துக்குடியில்  இப்பட ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இப்பட சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.

சமீபத்தில், திரைப்படங்களுக்கு மத்திய  அரசின் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் பைல்ஸ், கடைசி விவசாயி உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றிருந்தன.

முக்கியமான படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை என்பதால் இதுபற்றி சினிமா பிரபலங்கள் கருத்து கூறினர்.

இந்த நிலையில், தேசிய விருதுகள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று விஷால் கூறியுள்ளார்.

 இதுபற்றி அவர் கூறியதாவது:

‘’தேசிய விருதுகள் உள்பட எந்த விருதுகள் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. ஒருவருக்கு விருது கொடுக்கலாமா, வேண்டாமா என 4 பேர்  தீர்மானிப்பதில் எனக்கு  உடன்பாடில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.