திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (09:15 IST)

பிக்பாஸ் வீட்டுக்குள் கழுதை வளர்ப்பு! கழுதையை ஒப்படைக்க சொல்லி பீட்டா கடிதம்!

Biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை இடம்பெற்றுள்ளதை கண்டித்துள்ள பீட்டா இந்தியா அமைப்பு, கழுதையை ஒப்படைக்க சொல்லி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

 

 

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவானா பிக்பாஸ் இந்தியா முழுவதும் பலரால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக உள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

 

இதில் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். இந்த இந்தி பிக்பாஸ் சீசனில் தமிழ் நடிகை ஸ்ருதிகா பிக்பாஸ் வீட்டில் இணைந்துள்ளார். சமீபத்தில் இந்தி பிக்பாஸில் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் காதராஜ் என்ற பெயர் கொண்ட கழுதையை பிக்பாஸ் வீட்டிலேயே பராமரித்து வளர்க்க வேண்டும். இதற்காக பிக்பாஸ் வீட்டில் ஒரு பக்கம் கழுதை கட்டி வைக்கப்பட்டுள்ளது.
 

 

இந்த ப்ரோமோ வெளியான நிலையில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா இந்தியா, நடிகர் சல்மான் கான் மற்றும் பிக்பாஸ் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் விலங்குகளை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதுடன், கழுதையை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K