திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (08:20 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ்.. குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன்  திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி இருக்கும் நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருவதால், இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசானது.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி என்றாலும், ஆந்திரா, தெலுங்கானா, புதுவை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், வெளிநாடுகளிலும், அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், இந்த படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படுகிறது.

வேட்டையன் படத்திற்கான விமர்சனங்களில் பெரும்பாலானவை பாசிட்டிவ் விமர்சனங்களாக குவிந்து வருகிறது. ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து, ஒரு வலிமையான கருத்து மற்றும் கமர்சியல் படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார் என்றும், இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் அனிருத்தின் பின்னணி இசை என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில், பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva