வெள்ளி, 13 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (10:01 IST)

ஷாருக் கானுக்கு வில்லனாக வாய்ப்பு… ஏற்பாரா எஸ் ஜே சூர்யா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இதையடுத்து ஷாருக் கான் ‘கிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.. இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார். இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிகக் எஸ் ஜே சூர்யாவை படக்குழு அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தற்போது தான் நடிக்கும் படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தை ஏற்க முடியாத சூழலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக படக்குழு அவரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.