வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (11:20 IST)

மருத்துவத் துறை பின்னணியில் உருவாகும் படத்தில் செவிலியராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  டிரைவர் ஜமுனா மற்றும் ஃபர்ஹானா உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது அவர் மருத்துவத்துறை பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்துக்கு திரைக்கதை எழுதிய சவரிமுத்து இயக்குகிறார். யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தானபாரதி, அர்ஜுன் சிதம்பரம், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நர்ஸாக இந்த படத்தில் நடிக்க, நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு ஈசிஆர்-ல் மருத்துவமனை செட் அமைக்கப்பட்டு அங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.