1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (16:30 IST)

டாக்டர் ஓடிடி ரிலீஸை மறுத்துள்ள தயாரிப்பாளர்!

டாக்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

இது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்போது கே ஜே ஆர் ராஜேஷ் மறுத்துள்ளாராம். விரைவில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளாராம்.