செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (13:16 IST)

ஓடிடியில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’: அதிகாரபூர்வ அறிவிப்பா?

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். மேலும் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ‘டாக்டர்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது, இந்த போஸ்டரில் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் அல்லது கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு என எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது