புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (17:30 IST)

தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்ட தயாரிப்பாளர் சங்கம்!!!

சர்கார் படம் இணையதளத்தில் வெளியாகும் என்ற தமிழ்ராக்கர்ஸின் மிரட்டலை முறியடிப்போம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க சங்கத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது 
அதில் கூறப்பட்டுள்ளதாவது.
 
யாராவது திருட்டுத்தனமாக படத்தை மொபைல் போனிலோ காமிராவிலோ படம் எடுத்தால் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
 
இதனையடுத்து யாராவது போனில் படம் எடுக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனெ திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக நபர்களை நியமிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.
 
ஏற்கனவே சர்கார் திரைப்படம் இணையதளங்களில் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் உத்தரட்டிருந்தது.
 
ஆனால் இதற்கு மாறாக எச் டி பதிப்பாக இணையம் மற்றும் யூடூப்களீல் சர்கார் படத்தை வெளியிடப்போவதாக இன்று ஒரு பதிவிட்டிருந்தது தமிழ ராக்கரஸ். அதற்கு சவால் விடும் வகையில் இப்போது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இம் முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.