விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை?

VM| Last Modified திங்கள், 26 நவம்பர் 2018 (11:41 IST)
விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தேதி ஒதுக்கி தரப்பட்டது. 
 
ஆனால், அப்படமோ தீபாவளி தினத்தில் வெளியாகாமல் ஒரு வாரத்துக்கு பிறகு தான் வெளியிடப்பட்டது. இதனால், விஜய் ஆண்டனி மீது தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை பாய்ந்தது.
 
இந்நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சீதக்காதி' படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் டிசம்பர் 14 அன்று தேதி ஒதுக்கியுள்ளது. ஆனால், 'சீதக்காதி' 21ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று பட போஸ்டர்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
 
இதனால், விஜய் ஆண்டனி மீது விழுந்த சங்க நடவடிக்கை விஜய்சேதுபதிமீது பாய வாய்ப்பு உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :