வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2023 (14:20 IST)

#ஜவான் பட பிரிவியூ வீடியோ 112 மில்லியன் வியூஸ் -''எல்லோருக்கும் நன்றி'' அட்லீ டுவீட்

jawan
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர்  அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ஜவான்.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில்  விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பை  தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்திற்கு சமீபத்தில் மத்திய சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ்  சான்றிதழ் வழங்கியது.

இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நேரத்தில், நேற்று  இயக்குநர் அட்லீ ஜவான் பட பிரிவியூ வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இந்த வீடியோ வைரலானது. மேலும், இந்தியில் அறிமுகமானதற்கும், இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக வந்துள்ளதற்கும்  சினிமாத்துறையினர் , இயக்குநர் அட்லீக்கு வாழ்த்துகள் கூறி பாராட்டினர்.

இந்த  நிலையில்,  இப்படத்தின் பிரிவியூ வீடியோ அனைத்து பிளேட்பார்ம்களிலும் 120 மில்லியன் வியூஸை பெற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில்  ஒரு போஸ்டரை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து, ‘’எல்லோருக்கும் நன்றி’’ என்று இயக்குநர் அட்லீ பதிவிட்டுள்ளார்.