1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (20:47 IST)

நடிகர் சல்மான் கானை நிச்சயம் கொல்வோம் - கோல்டி பிரார் மிரட்டல்

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை நிச்சயம் கொல்வோம் என்று கோல்டி பிரார் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார்.  கடந்த மார்ச் மாதம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து இமெயில் வந்தது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகிய  இருவர் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கோல்டி பிரார் சமீபத்தில் அளித்த பேட்டியில்,  நடிகர் சல்மான் கானை நிச்சயம் கொலை செய்வோம் என்று கூறியுள்ளார்.

சல்மான் கானை மன்னிக்க மாட்டேன் என்றும் அவரை கொல்வது என் வாழ்க்கையின் லட்சியம் என்று கூறிய லாரன்ஸ் பிரார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோல்டி பிரார் சல்மான் கானை கொல்வேன் என்று கூறியது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.