வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:01 IST)

அப்பா அஜித்தை போன்றே குட்டி தல கூட கார் பிரியர்..! வைரலாகும் கியூட் வீடியோ!

நடிகர் அஜித் மகன் ஆத்விக்கும் அப்பாவை போன்றே கார் பிரியர் தானாம், இணையத்தில் வைரலாகும் விடியோவை நீங்களும் பாருங்க..! 


 
தமிழ் சினிமா ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் தல அஜித். அவர் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அன்று முழுவதும் தமிழகமெங்கும் திருவிழா தான். அந்த அளவிற்கு அவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். 
 
சினிமாவையும் தாண்டி சமூகத்தில் அஜித் ஒரு நல்ல மனிதர் என்பது ஊரறிந்த உண்மை. நடிப்பு மட்டுமல்லாது கார் பந்தயம், விமான வடிவமைப்பு, கேமரா போன்ற பிற செயல்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதில் வெற்றி காண்பவர் தல அஜித் . 
 
அந்த வகையில் தற்போது அஜித் மகனான குட்டி தல எனும் ஆத்விக் அம்மா ஷாலினியுடன் ஷாப்பிங் சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவை பார்க்கும் அனைவரையும்  ஈர்த்துள்ளது. அதில் ஆத்விக் ஷாலினியிடம்  கார் வேண்டும் என்று கேட்பது அவ்வளவு கியூட்டாக உள்ளது.

தல அஜித்திற்கு இருக்கும் அதே ஆர்வம் மகன் ஆத்விக்கும் உள்ளதை கண்ட ரசிகர்கள் வருங்காலத்தில் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வியில் உள்ளனர். தல ரசிகர்ளையும் தாண்டி பார்ப்பவர்களை அனைவரையும் மகிழ்ச்சியூட்டியுள்ளது இந்த கியூட் வீடியோ.