தவறான செய்திகளை போலி ட்வீட்டை நம்பிப் பதிவிட வேண்டாம்- பைரசி தடுப்புப் பிரிவு

Last Modified சனி, 10 நவம்பர் 2018 (17:00 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமிஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’2.0’. இந்தியத் திரையுலகில் அதிகப் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இது. சுமார் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. 
இந்தப் படத்தை இணையத்தில் வெளியிடப்போவதாக தமிழ்ராக்கர்ஸ் மிரட்டியிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய படங்களை  யாரும் வெளியிட முடியாது என மறுத்து தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் பைரசி தடுப்புப் பிரிவு கருத்து தெரிவித்து உள்ளது.
 
 தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், அந்த அமைப்பு கூறியிருப்பதாவது: " சர்கார், 2.0 பற்றி ட்வீட் செய்ததால் @TamilRockersMV @TamilRockers_ph ஆகிய தமிழ்ராக்கர்ஸின் போலி அக்கவுன்டுகள், அவர்களுடைய அதிகாரபூர்வ கணக்கு @tamilmvoff ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. 
 
உங்கள் தகவலுக்கு - திருட்டு வெப்சைட்டால் படத்தின் HD பதிவை படம் வெளியாகும் நாளன்றே பகிர முடியாது.  காரணம், படத்தின் ஆன்லைன் பார்ட்னர் அதை இணையத்திலோ அல்லது அப்ளிகேஷனிலோ பதிவேற்றியபிறகுதான் அதை செய்ய முடியும். 
 
எனவே செய்தி ஊடகங்கள் தவறான செய்திகளை ஒரு போலி ட்வீட்டை நம்பிப் பதிவிட வேண்டாம் எனக் கோருகிறோம். எனப் பதிவிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :